/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வாசுதேவநல்லூரில் வாகன சோதனை ரூ.1.08 லட்ச கள்ள நோட்டுகள் பறிமுதல் : இருவர் கைதுவாசுதேவநல்லூரில் வாகன சோதனை ரூ.1.08 லட்ச கள்ள நோட்டுகள் பறிமுதல் : இருவர் கைது
வாசுதேவநல்லூரில் வாகன சோதனை ரூ.1.08 லட்ச கள்ள நோட்டுகள் பறிமுதல் : இருவர் கைது
வாசுதேவநல்லூரில் வாகன சோதனை ரூ.1.08 லட்ச கள்ள நோட்டுகள் பறிமுதல் : இருவர் கைது
வாசுதேவநல்லூரில் வாகன சோதனை ரூ.1.08 லட்ச கள்ள நோட்டுகள் பறிமுதல் : இருவர் கைது
ADDED : அக் 01, 2011 11:30 PM
சிவகிரி : வாசுதேவநல்லூரில் வாகன சோதனையின் போது 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பிடிபட்டன.
இது சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் இருவர் சூட்கேசுடன் வந்தனர். அவர்களை சோதனை செய்ததில் சூட்கேசில் கட்டு கட்டாக 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் இவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதும் தெரிய வந்தது. சூட்கேசில் மொத்தம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது.
இதுதொடர்பாக பைக்கில் வந்த தூத்துக்குடி நூசாயிபுரத்தை சேர்ந்த துரைச்சாமி மகன் குருமூர்த்தி (53), விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (46) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கள்ள நோட்டுகளை சென்னையை சேர்ந்த ஜெகன் என்பவரிடம் வாங்கியதாக கூறினர். பின்னர் போலீசார் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு ஏஜன்டாக செயல்பட்ட ஜெகனை தேடி வருகின்றனர்.


