காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது: கருணாநிதி
காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது: கருணாநிதி
காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது: கருணாநிதி
UPDATED : செப் 15, 2011 06:13 PM
ADDED : செப் 15, 2011 05:39 PM
சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில், அந்தந்த பகுதிகளின் பிரச்னைகள், வசதிகளை மையமாக வைத்து தி.மு.க., போட்டியிடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அண்ணா அறிவாயத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது, தனித்து போட்டியிடுவதால் மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க., பிரமுகர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தமிழக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறது. சர்வாதிகார போக்குடன் செயல்படும் அரசு நீண்ட காலம் நீடித்ததில்லை என வரலாறு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூட்டிய கூட்டத்தை மாவட்ட கலெக்டர்கள் மேலிட கட்டளை காரணமாக புறக்கணித்துள்ளனர். இது போன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். கனிமொழிக்கும் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும்எந்தவிதமுமான தொடர்புமில்லை. கலைஞர் டிவியில் கனிமொழி ஒரு பங்குதாரர் மட்டுமே என கூறியுள்ளார்.


