Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறையினரும் தயாராக இருக்க உத்தரவு

வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறையினரும் தயாராக இருக்க உத்தரவு

வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறையினரும் தயாராக இருக்க உத்தரவு

வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறையினரும் தயாராக இருக்க உத்தரவு

ADDED : செப் 03, 2011 02:53 AM


Google News
திருநெல்வேலி:வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் செல்வராஜ் தெரிவித்ததாவது:அணைகளின் நீர் வரத்து இருப்பு மற்றும் நீர் போக்கு விபரங்களை தினமும் காலை 8 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு டெலிபோனில் தெரிவிக்க வேண்டும். நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை காலி சாக்குகள், மணல் மூட்டைகளை வைத்து அடைக்க வேண்டும். தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக தடையாக உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர் நிலைகளில் தூர் எடுத்து, வெள்ள அபாயம் ஏற்படும் ஆற்றோர பகுதி மக்குளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவற்றை ல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீரேற்று நிலையங்களை குளோரின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

தீயணைப்பு துறையினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ துறை மற்றும் பொது சுகாதார துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை கால்நடைத் துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம், வேளாண் மற்றும் தோட்டக் கலை துறையினர், கல்வித் தறை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் உட்பட அனைத்து துறையினரும் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இதில் மாநகராட்சி கமிஷனர் அஜய் யாதவ், டி.ஆர்.ஓ உமா மகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், போலீஸ் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், நகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us