/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/நில பிரச்னை வழக்கில் மாவட்ட பஞ்., தலைவருக்கு முன்ஜாமீன்நில பிரச்னை வழக்கில் மாவட்ட பஞ்., தலைவருக்கு முன்ஜாமீன்
நில பிரச்னை வழக்கில் மாவட்ட பஞ்., தலைவருக்கு முன்ஜாமீன்
நில பிரச்னை வழக்கில் மாவட்ட பஞ்., தலைவருக்கு முன்ஜாமீன்
நில பிரச்னை வழக்கில் மாவட்ட பஞ்., தலைவருக்கு முன்ஜாமீன்
ADDED : செப் 16, 2011 12:00 AM
நாகர்கோவில் : நாகர்கோவிலில் நில பிரச்னை தொடர்பான வழக்கில் மாவட்ட பஞ்., தலைவர்அஜிதா உட்பட 3 பேருக்கு கோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
நாகர்கோவில் தாம்சன் தெருவை சேர்ந்தவர் தயாபாக்கியசிங் (31) இவர் மாவட்ட பஞ்., தலைவர் அஜிதா பொன்சிலிக்கு சொந்தமான நிலத்தில் 60 லட்சம் ரூபாய் கொடுத்து 3.09 ஏக்கர் நிலம் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து தயாபாக்கியசிங் கோர்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் மாவட்ட பஞ்., தலைவர் அஜிதா பொன்சிலி, சரவணபிரசாத், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஜி.எம்.ஷா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்படி வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மதுரை ஐகோர்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கீழ்கோர்டில் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தார். இதன்படி நாகர்கோவில் கோர்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். அதைப்போல் மாவட்ட பஞ்., தலைவர்அஜிதா, சரவணபிரசாத், சார் பதிவாளர் ஷாஜஹாஜ் ஆகியோர் ஜாமீன் கேட்டு நாகர்கோவில் மாவட்ட கோர்டில் மனு செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கீழ்கோர்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார். இதன்படி அஜிதா பொன்சிலி, சரவணபிரசாத், ஷாஜஹான் ஆகிய மூன்று பேரும் ஜேஎம் 2 கோர்டில் சரணடைந்தனர். மாஜிஸ்திரேட் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கினார்.


