Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

ADDED : ஆக 12, 2011 02:13 AM


Google News
விழுப்புரம்:கள்ளக்குறிச்சி அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் குமார்.

இவர் தனது நிலத்திற்கு மின் இணைப்பு பெற தந்தை ராசு பெயரில் உள்ள நிலத்திற்கான பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்கக் கோரி, கடந்த மாதம் 22ம் தேதி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார்.கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் தொட்டியம் ஊராட்சி வி.ஏ.ஓ., முகமதுஅலி, 54, பட்டா மாற்றம் செய்ய, குமாரிடம் 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது பற்றி குமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., கன்னியப்பன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 3.35 மணிக்கு, தொட்டியத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று கண்காணித்தனர்.அப்போது 3,000 ரூபாயை வி.ஏ.ஒ., முகமதுஅலியிடம் குமார் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், முகமது அலியை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லஞ்ச பணத்தை பெற்று வைத்திருந்த வி.ஏ.ஓ., முகமது அலியின் உதவியாளர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us