/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஒரு வாரத்துக்குள் தேர்தல் பணிகளை முடிக்க உத்தரவுஒரு வாரத்துக்குள் தேர்தல் பணிகளை முடிக்க உத்தரவு
ஒரு வாரத்துக்குள் தேர்தல் பணிகளை முடிக்க உத்தரவு
ஒரு வாரத்துக்குள் தேர்தல் பணிகளை முடிக்க உத்தரவு
ஒரு வாரத்துக்குள் தேர்தல் பணிகளை முடிக்க உத்தரவு
ADDED : ஆக 05, 2011 10:16 PM
ராமநாதபுரம்:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை ஒரு வாரத்துக்குள்
முடிக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம்
வரும் அக்.,25ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை
தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் நடந்து
வருகின்றன. சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது, உள்ளாட்சி தேர்தல் வரும்
அக்டோபரில் நடத்தப்படும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி
உள்ளாட்சி தேர்தலுக்குரிய பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க அரசு
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக தேர்தல் நேர்முக உதவியாளர், பி.டி.ஓ.,க்கள்
மாவட்டம், ஒன்றிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்களும் விரைவில்
நியமிக்கப்பட உள்ளனர். தற்போது எந்தெந்த வார்டுகள் ஆண்களுக்குரியது,
பெண்களுக்குரியது, தனி வார்டுகள் எவை என்பது குறித்த எடுக்கப்பட்ட
விபரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிய
பெயர்களை சேர்க்கும்போது ஏற்படும் சந்தேகங்கள், பல உறுப்பினர், ஒரு
உறுப்பினர் வார்டாக மாற்றப்படும் சந்தேகங்கள் குறித்தும், வீடியோ
கான்பரன்சிங் முறையில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.


