/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பல்கலைக்கழக "ஹேண்ட்பால்' கடலூரில் வீராங்கனைகள் தேர்வுபல்கலைக்கழக "ஹேண்ட்பால்' கடலூரில் வீராங்கனைகள் தேர்வு
பல்கலைக்கழக "ஹேண்ட்பால்' கடலூரில் வீராங்கனைகள் தேர்வு
பல்கலைக்கழக "ஹேண்ட்பால்' கடலூரில் வீராங்கனைகள் தேர்வு
பல்கலைக்கழக "ஹேண்ட்பால்' கடலூரில் வீராங்கனைகள் தேர்வு
ADDED : செப் 06, 2011 10:27 PM
கடலூர் : திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டலங்களிடையே மாணவிகளுக்கான 'ஹேண்ட்பால்' போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையே மாணவிகளுக்கான 'ஹேண்ட்பால்' போட்டி ஆந்திரா மாநிலம் வாரங்கல்லில் உள்ள கக்காத்தியா பல்கலைக் கழகத்தில் டிசம்பர் மூன்றாவது வாரம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருவள்ளுவர் பல்கலைக் கழக அணி வீரர்கள் தேர்வுக்கான மண்டலங்களுக்கிடையே இரண்டு நாள் 'ஹேண்ட்பால்' போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது. போட்டிகள் திருவள்ளுவர் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் அமல்தாஸ் முன்னிலையில் நடந்தது.
வேலூர் மண்டல போட்டியில் திருவண்ணாமலை கம்பன் கல்லூரி, வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரிகள் மோதின. இதில் கம்பன் கல்லூரி அணி வெற்றி பெற்றது. கடலூர் மண்டல போட்டியில் கடலூர் செயின்ட்ஜோசப் கல்லூரி, விழுப்புரம் தெய்வானை அம்மன் கல்லூரிகள் மோதின. இதில் விழுப்புரம் கல்லூரி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கிடையேயான போட்டி மாலை நடந்தது. மேலும் 7, 8ம் தேதிகளில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


