/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனைவிவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : செப் 10, 2011 03:47 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நிலத்தகராறு தொடர்பாக விவசாயியை கொலை செய்த அவரது உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வக்கோட்டை அடுத்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி(55).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாணிக்கம்(65) என்பவருக்கும் வீட்டு மனையை அளந்து ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் அப்பகுதியை சர்வே செய்வதற்காக வருவாய்த்துறையினர் சென்றுள்ளனர். ரெங்கசாமியின் வீட்டு மனையை வருவாய்த் துறையினர் அளந்தபோது மாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக இருவருக்கும் இடையே வருவாய்த்துறையினர் முன்னிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரெங்கசாமி தாக்கியதால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணிக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் கடந்த 2010 செப்., 4ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீஸார், ரெங்கசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசுந்தரம், கொலை குற்றத்தில் ஈடுபட்ட ரெங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பளித்தார்.


