/உள்ளூர் செய்திகள்/மதுரை/சமூகப் பணிகளில் டி.வி.ஆர்., : மதுரை ஆதீனம் புகழாரம்சமூகப் பணிகளில் டி.வி.ஆர்., : மதுரை ஆதீனம் புகழாரம்
சமூகப் பணிகளில் டி.வி.ஆர்., : மதுரை ஆதீனம் புகழாரம்
சமூகப் பணிகளில் டி.வி.ஆர்., : மதுரை ஆதீனம் புகழாரம்
சமூகப் பணிகளில் டி.வி.ஆர்., : மதுரை ஆதீனம் புகழாரம்
ADDED : அக் 04, 2011 12:53 AM
மதுரை : ''தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் தினமலர் நாளிதழ், மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருந்து வருகிறது,'' என, மதுரை ஆதீனம் பேசினார்.
மதுரையில் பாரதியுவகேந்திரா மற்றும் மதுரை தமிழ் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த, தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாள் விழாவில், பார்வையற்ற குடும்பத்தினருக்கு இலவச அரிசி வழங்கி அவர் பேசியதாவது: டி.வி.ராமசுப்பையர் நினைத்த, விட்டுச் சென்ற சமூகப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு இதழ் துவங்கி அதை வெற்றிகரமாக, நிரந்தரமாக நடத்துவது என்பது எளிதல்ல. டி.வி.ராமசுப்பையரால் துவங்கப்பட்ட 'தினமலர்' முத்திரை பதித்துள்ளது. சமய, அரசியல், இலக்கியம், விளையாட்டு என அனைத்து துறைகளையும் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கிறது. கட்சி சார்ந்து இதழ்கள் நடத்தினால் நிரந்தரமாக நிற்க முடியாது.
எந்த ஒரு செயலாக இருந்தாலும், அதில் பட்டறிவு தேவை. அது தான் மிகப் பெரிய அனுபவமாக இருக்கும். எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சமூக பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு போதும் நன்றி மறக்கக்கூடாது, என்றார்.லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுனர் முருகேசமூர்த்தி, போலீஸ் உதவி கமிஷனர் மாரிராஜன், பாரதியுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, லயன்ஸ் நிர்வாகிகள் முருகன், விஜயன், விஜயபிரகாஷ், தங்கதுரை உட்பட பலர் பங்கேற்றனர். பார்வையற்ற குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்கி சிறப்பிக்கும் நபர்களுக்கு சேவா ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.


