ADDED : ஆக 17, 2011 01:42 AM
கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் சுதந்திர தினவிழா நடந்தது.
முதல்வர் பொறுப்பு முனைவர் கோவிந்ததாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். பின்னர் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் பழனிவேலு மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் துரையரசன், முனைவர் ராமச்சந்திரராஜா, முனைவர் தங்கராசு, பேராசிரியை பியூலா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர். * கும்பகோணம் கீழக்கொட்டையூர் வள்ளலார் மேனிலைப்பள்ளியில், முப்பள்ளிகளின் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி நிறுவனத்தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், குடந்தை அரிமா சங்கத்தினர் மற்றும் உறுப்பினர்கள், முப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், இரு பால் ஆசிரியர்கள், மற்றும் அலுவலகப்பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்டம், ஜஞுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள், சாரணர் இயக்க மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை கழ்சசிகள் நடத்தப்பட்டன. இத்தகவலை பள்ளியின் தலைமையாசிரியர் சுலோச்சனா தெரிவித்தார்.


