/உள்ளூர் செய்திகள்/சேலம்/17 பேர் பலியான வெடி விபத்து மூவரிடம் நீதிபதி விசாரணை17 பேர் பலியான வெடி விபத்து மூவரிடம் நீதிபதி விசாரணை
17 பேர் பலியான வெடி விபத்து மூவரிடம் நீதிபதி விசாரணை
17 பேர் பலியான வெடி விபத்து மூவரிடம் நீதிபதி விசாரணை
17 பேர் பலியான வெடி விபத்து மூவரிடம் நீதிபதி விசாரணை
ஆத்தூர்: ஆத்தூரில், 17 பேர் பலிக்கு காரணமான வெடி விபத்து வழக்கில், பொதுப்பணித்துறை அதிகாரி உட்பட மூன்று பேரிடம், சார்பு நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்தார்.
கடந்த, 2002ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி இரவு 10.30 மணியளவில், பட்டாசு அடுக்கி வைத்திருந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில், ஐந்து சிறுவர்கள் உட்பட, 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர். வெடி விபத்துக்கு காரணமான ரவி, செல்வம், கதிர்வேலு, செல்லம்மாள் உட்பட, 15 பேர் மீது ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதில், நான்கு பேர் சம்பவ தினத்தன்று உயிரிழந்ததால், மீதம் உள்ள, 11 பேர் மீதான வழக்கு, ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், அரசு மருத்துவ அலுவலர், வி.ஏ.ஓ., நகராட்சி அதிகாரிகள் என மொத்தம், 155 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் வரை, 125 பேரிடம் விசாரணை நடத்தபட்டது. நேற்று, சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ணன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பணித்துறை அலுவலர் பாலசுப்ரமணியன், ஆத்தூர் டவுன் வி.ஏ.ஓ., உதவியாளர் செம்மலை, போலீஸ் ஃபோட்டோ கிராபர் சாதிக் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. வரும் அக்டோபர் 10ம் தேதி, மீதம் உள்ள சாட்சிகளிடம் வழக்கு விசாரணை செய்யப்படும் என, நீதிபதி உத்தரவிட்டார். இன்று, (16ம் தேதி) பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கின்றனர்.


