ADDED : அக் 07, 2011 09:59 PM

கடந்த 1959ல் மதுரை நகராட்சி தேர்தலில் காங்., போட்டியிட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவோடு ஜனநாயக காங்கிரசும் தேர்தலை சந்தித்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இக்கூட்டணியை உருவாக்கியவர் முத்துராமலிங்கத்தேவர். இத்தேர்தலில் ஜனநாயக காங்., வெற்றி பெற்று முதன்முதலாக நகராட்சியை கைப்பற்றியது. நகரசபைத் தலைவராக தேவசகாயம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாகதான் மதுரை நகராட்சியை தி.மு.க., அ.தி.மு.க., பிடித்தது. இப்போது மாநகராட்சி அந்தஸ்துடன் உள்ள மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க.,வைச் சேர்ந்த குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன், தேன்மொழி ஆகியோர் மேயர்களாக இருந்தனர்.


