மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி
மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி
மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி
ADDED : செப் 27, 2011 11:26 PM
கடலூர் : மகாளய அமாவாசையையொட்டி கடலூர் பெண்ணையாறு, தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.தை, ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இதுவரை பிதுர் தர்ப்பணமே செய்யாதவர்கள் மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால் சிறந்தது.மகாளய அமாவாசையன்று தான் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். தர்ப்பணத்தின்போது எள், ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை வைத்து திதி கொடுக்கப்படும்.பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வரும் முன்னோர் மீண்டும் பிதுர் லோகத்திற்கு இன்று திரும்புவர்.இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி பிதுர் வழிபாடு செய்வது அவர்களை வழியனுப்பி வைப்பதன் மூலம் குடும்பம் செல்வ செழிப்புடன் வாழும் என்பது ஐதீகம்.
நேற்று மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதல் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, பெண்ணையாறு ஆகியவற்றில் ஏராளமானோர் நீராடி, எள், ஜலம், பிண்டம், அரிசி உள்ளிட்ட தானியங்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.


