/உள்ளூர் செய்திகள்/தேனி/வீடுகளுக்குள் புகும் கழிவு நீரால் சிவலிங்கம்பட்டி கிராம மக்கள் பாதிப்புவீடுகளுக்குள் புகும் கழிவு நீரால் சிவலிங்கம்பட்டி கிராம மக்கள் பாதிப்பு
வீடுகளுக்குள் புகும் கழிவு நீரால் சிவலிங்கம்பட்டி கிராம மக்கள் பாதிப்பு
வீடுகளுக்குள் புகும் கழிவு நீரால் சிவலிங்கம்பட்டி கிராம மக்கள் பாதிப்பு
வீடுகளுக்குள் புகும் கழிவு நீரால் சிவலிங்கம்பட்டி கிராம மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 19, 2011 11:01 PM
திறந்த வெளிக்கழிப்பிடம், வீடுகளுக்குள் புகுந்து வரும் கழிவு நீரால் சிவலிங்கம்பட்டி கிராம மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சியில் பழையகோட்டை, சிவலிங்கம்பட்டி
கிராமங்கள் உள்ளன. முழுக்க முழுக்கவிவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள
சிவலிங்கம்பட்டியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. பொதுமக்கள் அன்றாடம்
அவதிப்படுகின்றனர். தேவையான பஸ் வசதி இல்லாததால் இவர்கள் வெளியூர்
செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குடியிருப்புகளை ஒட்டி உள்ள சாக்கடை கழிவு
நீர் நேரடியாக வீட்டிற்குள் புகுகிறது.குடிநீர் குழாய் அருகே நிலவும்
சுகாதார சீர்கேடு நோயை பரப்புவதாக உள்ளது. அள்ளப்படாத குப்பைகள், திறந்த
வெளிக்கழிப்பிடம் இவற்றின் பாதிப்புகளை ஊராட்சி நிர்வாகம் கண்டு
கொள்ளவில்லை.
இந்த ஊரில் பொதுமக்களின் தேவைகள், அவர்களின் சிரமங்கள் குறித்து
அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. விவசாய கூலிகள், விவசாயிகள் அதிகம் உள்ள
இக்கிராமத்தின் தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.அடிப்படைத்தேவைகள், கிராமத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து
இப்பகுதி மக்கள் கூறியதாவது:பி.தங்கம்: பாலக்கோம்பை கூட்டு குடிநீர்
திட்டத்தில் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. ஆழ்குழாய் மூலம்
மோட்டார் பொறுத்தி மேல்நிலைத்தொட்டி மூலம் தண்ணீர் தேவை பூர்த்தி
செய்யப்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர்
சப்ளை பாதிக்கிறது. தேவையான இடத்தில் தரைமட்டத்தொட்டிகள்அமைத்து தண்ணீர்
தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் அனைவரும்
திறந்த வெளிக்கழிப்பிடம் பயன்படுத்தும் நிலை உள்ளது. காலை 7, 10.30, பகல்
12, மாலை 4.30, இரவு 8 மணிக்கு மட்டுமே பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில்
மூன்று கி.மீ.,தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டும். பி.தனலட்சுமி:
சுடுகாட்டில் கொட்டகை, தண்ணீர் வசதி இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்ய
மழைக்காலங்களில் சிரமப்பட வேண்டும்.
சத்துணவுக்கூடம், பால்வாடி வசதி இல்லை.
விவசாயம் மட்டுமே நடந்து வரும் இப்பகுதியில் மும்முனை மின்சாரம் சரிவர
கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் வினியோகமும் பாதிக்கிறது. சுகாதாரம் நலிந்த
இப்பகுதிக்கு கிராம செவிலியர்கள் யாரும் வருவதில்லை. காய்ச்சல், தலைவலி
என்றாலும், கர்ப்பிணிகள் அவரச சிகிச்சை என்றாலும் ராஜதானி ஆரம்பசுகாதார
நிலையம் செல்ல வேண்டும். அவரசர காலத்திற்கு பஸ் வசதி இல்லை. டி.சதீஷ்:
சிமென்ட் தளம் பதிக்கப்பட்ட தெருக்களில் ஆழம் இல்லாத சாக்கடையால் கழிவு
நீர் வீடு முற்றத்தில் தேங்குகிறது. சாக்கடை புழுக்கள் வீடுகளுக்குள்
புகுந்து விடுவதால் அருவறுப்பு ஏற்படுகிறது. ரோட்டின் ஓரங்களை திறந்த
வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துவதால் வாகனங்களில் இக்கிராமத்தை கடந்து
செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கிராமத்தில் துப்புரவு பணியாளர்
அன்றாடம் வருவதில்லை. என்றாவது ஒரு நாள் சாக்கடையை சுத்தம் செய்தாலும்
குவிந்த குப்பைகள், சாக்கடை கழிவுகள் அப்புறப்படுத்தாமல் மீண்டும்
சாக்கடையில் சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. போனில் சொல்லுங்கள்
நேரில் வருகிறோம்.குடியிருப்போர் சங்க நிர்வாகிகளே.... பொதுமக்களே...உங்கள்
பகுதியில் தீராத பிரச்னைகள் இருக் கிறதா? எத் தனை முறை புகார் கூறியும்
கவுன்சிலர்கள், அதிகாரிகள் எட்டிபார்க்கவில் லையா? தினமலர் நிருபர் குழு
உங்கள் பகுதி பிரச் னைகளை படம் படித்து காட்ட தயாராக இருக்கிறது. 04546-
260 987க்கு காலை 9.30 முதல் 10.30 க்குள் போன் செய்யுங்கள்.
நமது சிறப்பு நிருபர்


