அருவிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
அருவிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
அருவிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : செப் 04, 2011 10:50 PM
பந்தலூர் : பந்தலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் நீராதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நடப்பு ஆண்டில் ஜூனில் துவங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியார் புன்னம்புழா ஆறு, பந்தலூர் பகுதியில் உற்பத்தியாகும் பொன்னானி ஆறு, சோலாடி, கோட்டூர் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பல இடங்களில் அருவிகள் காட்சியளிக்கின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கொட்டும் மழையிலும் இந்த காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.


