/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின் வாரிய டிரான்ஸ்பார்மர்களை தராமல்ஏமாற்றிய சென்னை தொழிலதிபர் கைதுமின் வாரிய டிரான்ஸ்பார்மர்களை தராமல்ஏமாற்றிய சென்னை தொழிலதிபர் கைது
மின் வாரிய டிரான்ஸ்பார்மர்களை தராமல்ஏமாற்றிய சென்னை தொழிலதிபர் கைது
மின் வாரிய டிரான்ஸ்பார்மர்களை தராமல்ஏமாற்றிய சென்னை தொழிலதிபர் கைது
மின் வாரிய டிரான்ஸ்பார்மர்களை தராமல்ஏமாற்றிய சென்னை தொழிலதிபர் கைது
ADDED : ஆக 01, 2011 10:42 PM
கோவை : பழுது பார்க்க கொடுத்த 2.79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்களை, திருப்பி அனுப்பாமல்,மோசடியில் ஈடுபட்ட சென்னை தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை டாடாபாத்தில் தமிழ்நாடு மின்வாரிய மின்வினியோக (தெற்கு) அலுவலகம் உள்ளது. கடந்த 2010ல், பழுதடைந்த நிலையில் இருந்த 10 டிரான்ஸ்பார்மர்களை சரி செய்ய, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமதி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. இதற்காக, 10 பேரல்களில் 2,000 லி.,ஆயிலும் கொண்டு செல்லப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 2.79 லட்சம் ரூபாய். குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னும் டிரான்ஸ் பார்மர்கள், எதையும் திருப்பி அனுப்பவில்லை. விசாரித்தபோது முறையான பதிலும் தரவில்லை. சந்தேகமடைந்த மின்வாரிய அதிகாரி நடராஜன், மோசடி பற்றி காட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜூ, எஸ்.ஐ.,மயில்சாமி தலைமையிலான தனிப்படைசென்னை விரைந்து, மின்வாரியத்துக்கு சொந்தமான பொருள்களை திருப்பித் தராமல் மோசடி செய்த, ஸ்ரீமதி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜான்விக்டரை கைது செய்தனர்.