/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முருங்கை விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விரக்திமுருங்கை விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விரக்தி
முருங்கை விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விரக்தி
முருங்கை விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விரக்தி
முருங்கை விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விரக்தி
ADDED : ஆக 26, 2011 11:00 PM
குஜிலியம்பாறை : திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகம்.
விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள், தென்னை, முருங்கை விளைச்சலில் ஆர்வமாக உள்ளனர். தற்போது முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், உரிய விலை கிடைக்கவில்லை. கிராம சந்தைகளில், 25 - 30 காய்கள் கொண்ட கட்டு ஐந்து ரூபாய்க்கும், செடி முருங்கை 10 முதல் 15 ரூபாய்க்கும், வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.இரு மாதங்களுக்கு முன், 40 முதல் 100 ரூபாய் வரை விலை போனது. இப்பகுதியில் அரசு சார்பில் காய்கறி குளிர் பதன கிடங்கு அமைத்தால், விவசாயிகள் பயனடைவர். அரசே நேரடி கொள்முதல் செய்தால் உரிய விலை கிடைக்கும். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜரத்தினம் கூறியது:முருங்கை, தக்காளி விளைச்சல் அதிகரித்தும், விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை. இதனால், குறைந்த விலைக்கு விற்கின்றனர். சில நேரங்களில் கீழே கொட்டுகின்றனர். குளிர்பதன கிடங்கு, கொள்முதல் நிலையம் அமைக்க, அரசு முன்வர வேண்டும், என்றார்


