/உள்ளூர் செய்திகள்/கடலூர்/25 ஆண்டுகளாக கடலூர் நகரம் பின்தங்கியுள்ளது25 ஆண்டுகளாக கடலூர் நகரம் பின்தங்கியுள்ளது
25 ஆண்டுகளாக கடலூர் நகரம் பின்தங்கியுள்ளது
25 ஆண்டுகளாக கடலூர் நகரம் பின்தங்கியுள்ளது
25 ஆண்டுகளாக கடலூர் நகரம் பின்தங்கியுள்ளது
ADDED : அக் 05, 2011 12:43 AM
கடலூர் : ''ஒவ்வொரு வார்டிலும் கூட்டம் நடத்தி மக்கள், பொது நல அமைப்புகளின் ஆலோசனை கேட்டு அதற்கேற்ப கடலூர் நகராட்சியில் மாற்றம் ஏற்படுத்தி முன் மாதிரியாக கொண்டு வருவோம்'' என மா.கம்யூ., வட்பாளர் தனசேகரன் கூறினார்.கடலூர் மா.கம்யூ., கட்சி அலுவலகம் திறப்பு விழா கடலூரில் நடந்தது.
தே.மு.தி.க., விவசாய அணி செயலர் சண்முகம் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் ஆறுமுகம், இந்திய கம்யூ., வட்டச் செயலர் சம்மந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலர் கருப்பையா, நகர செயலர் சுப்புராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.பின்னர் கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மா.கம்யூ., வேட்பாளர் தனசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலை தே.மு.தி.க., - மா.கம்யூ., இணைந்து சந்திப்பதால் புது நம்பிக்கை கிடைத்துள்ளது. கடலூர் நகராட்சியில் பல வல்லுனர்கள் சேர்மனாக இருந்துள்ளனர். 25 ஆண்டுகளாக கடலூர் நகரம் மிகப்பெரிய அளவில் பின்தங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டி பல மாதங்களாகியும் பணி துவங்கவில்லை. கடலூருக்கு புறவழிச் சாலை இல்லை. சிறப்பு பஸ் நிலையம் இல்லை.ஒவ்வொரு வார்டிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மக்கள், பொது நல அமைப்புகளின் ஆலோசனை கேட்டு அதற்கேற்ப நகராட்சியில் மாற்றம் ஏற்படுத்தி முன்மாதிரியாக கொண்டு வர முயற்சிப்போம்.சில்வர் பீச், திருவந்திபுரம், பாடலீஸ்வரர் கோவில் சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சி எடுப்போம்.கடலூரில் சாலை சரியில்லை. சுகாதாரம் இல்லை. இதனால் மக்களுக்கு பல நோய்கள் வருகிறது. சுகாதாரத்தை மேம்படுத்துவோம். புதிய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தனசேகரன் கூறினார்.


