/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/27வது வார்டு சீராகும் தே.மு.தி.க., வாக்குறுதி27வது வார்டு சீராகும் தே.மு.தி.க., வாக்குறுதி
27வது வார்டு சீராகும் தே.மு.தி.க., வாக்குறுதி
27வது வார்டு சீராகும் தே.மு.தி.க., வாக்குறுதி
27வது வார்டு சீராகும் தே.மு.தி.க., வாக்குறுதி
ADDED : அக் 12, 2011 01:40 AM
ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் நெருங்கியுள்ளதால், மாநகராட்சி 24வது வார்டில்
போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் மகேந்திரன், வீடு வீடாக சென்று ஆதரவு
கேட்டு வருகிறார்.வேட்பாளர் மகேந்திரன் கூறியதாவது: மாநகராட்சி 24வது
வார்டு வீரப்பன்சத்திரத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள்
மூடாததால், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி
பெற்றதால் முதல் வேலையாக சாலைகளை சீர் செய்வேன். கங்கை வீதி, வள்ளலார்
வீதி, சேக்கிளார் வீதி ஆகிய மூன்று இடங்களில் தண்ணீர் தொட்டி கட்டி,
தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பேன்.அடிப்படை வசதிகள் செய்து
கொடுப்பேன். ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், பிறப்பு இறப்பு
சான்று பெற்று தருதல் போன்றவற்றை முறையாக செய்து கொடுப்பேன். அரசின்
திட்டங்களை சீரிய முறையில் செய்து தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


