தேவகோட்டையில் ஆசிரியை வீட்டில் ரூ. 3 லட்சம் நகை திருட்டு
தேவகோட்டையில் ஆசிரியை வீட்டில் ரூ. 3 லட்சம் நகை திருட்டு
தேவகோட்டையில் ஆசிரியை வீட்டில் ரூ. 3 லட்சம் நகை திருட்டு
ADDED : செப் 27, 2011 11:27 PM
தேவகோட்டை: தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலைத்தெருவில் வசிப்பவர் ஜோசப் தியோடர்.
சமூகசேவகர். இவரது மனைவி அமுதா, தேவகோட்டை இன்பென்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.நேற்று பள்ளி சென்றவர் மாலையில் வீட்டை திறந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அமுதா தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். ஏ.எஸ்.பி. சமந்த ரோகன் ராஜேந்திரா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். ஏழு தினங்களுக்கு முன், இந்த வீட்டிற்கு 100 அடி தூரத்தில் தான் வைரம் குரூப் பள்ளி ஆசிரியை சுமித்ராவின் கடை பூட்டை உடைத்து, சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது குறிப்பிட தக்கது.


