/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்திவிபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : செப் 06, 2011 10:33 PM
விழுப்புரம் : விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் தாலுகா விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பாஸ்கல்ராஜ்,19. நெடுஞ்சாலை ஓட்டலில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜன. 14ம் தேதி திண்டிவனத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் திடீரென மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து இழப்பீடு வழங்க கோரி ஆரோக்கியசாமி விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கில், மனுதாரர் குடும்பத்திற்கு 3 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகை வழங்குமாறு கடந்த 2.6.2009 அன்று முதன்மை நீதிபதி சின்னப்பன் உத்தரவிட்டார்.
இதன் பிறகும் உரிய இழப்பீடு வழங்கப்படாததால் ஆரோக்கியசாமி தரப்பில் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி தியாகராஜமூர்த்தி, அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்து, பாஸ்கல்ராஜ் குடும்பத்தினருக்கு 4 லட்சத்து 66 ஆயிரத்து 264 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்றை (டிஎன் 01 7097) கோர்ட் கட்டளை நிறைவேற்றுனர் கலியமூர்த்தி ஜப்தி செய்தார். வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆரோக்கியசாமி உடனிருந்தனர்.


