ADDED : செப் 08, 2011 01:51 AM
அவனியாபுரம் : அவனியாபுரத்தில் இன்று திருமணம் நடக்கயிருந்த நிலையில் மணமகன் மாயமானார்.
சென்னை கள்ளிக்குப்பத்தை சேர்ந்த மகாராஜன் மகன் சின்னதுரை(25). இவருக்கு, மதுரை வைக்கம் பெரியார்நகரில் உள்ள சகோதரியின் உறவுப் பெண்ணை திருமணம் செய்ய பேசி முடித்தனர். செப். 5ல் நடந்த நிச்சயத்தில், மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்றனர். இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், சின்னதுரை செப். 6 முதல் தலைமறைவாகி விட்டதாக, தந்தை மகாராஜன், அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார், அவரை தேடி வருகின்றனர்.


