Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் சாத்தான்குளம் பள்ளிமாணவர்கள் மாவட்டப்போட்டிக்கு தகுதி

வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் சாத்தான்குளம் பள்ளிமாணவர்கள் மாவட்டப்போட்டிக்கு தகுதி

வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் சாத்தான்குளம் பள்ளிமாணவர்கள் மாவட்டப்போட்டிக்கு தகுதி

வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் சாத்தான்குளம் பள்ளிமாணவர்கள் மாவட்டப்போட்டிக்கு தகுதி

ADDED : செப் 03, 2011 11:26 PM


Google News

சாத்தான்குளம் : சாத்தான்குளம் புலமாடன்செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நாசரேத் வட்டார அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தூத்துக்குடியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெற்றனர்.

நாசரேத்தில் நடந்த வட்டார அளவிலான பால் பேட்மிட்டன் விளையாட்டில் கலந்துகொண்ட மாணவியர்கள் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெற்றனர். மாணவர் பிரிவில் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு இரண்டாமிடம் பெற்றனர். தடகளப்போட்டிகளில் மாணவியர் பிரிவில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் மாணவி அபர்ணா முதலிடம் பெற்றார். அதே பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாணவி ரஞ்சிதா ஏஞ்சல் இரண்டாமிடம் பெற்றார். 19 வயதிற்குட்பட்டடோர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி ஏஞ்சல் முதலிடம் பெற்றார். அதே பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் மாணவி உமா பாரதி மூன்றாம் இடம் பெற்றார். மாணவர்கள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் பகவதி முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் செல்வின் இரண்டாமிடமும், உயரம்தாண்டுதல் பிரிவில் பாலசந்திரன் மூன்றாமிடமும், நீளம் தாண்டுதல் கரடிமுத்து மூன்றாம் இடமும், 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் இரண்டாமிடமும் பெற்றனர். தடகள பிரிவில் முதலிடம், இரண்டாம் இடம் பெற்றவர்கள் மாவட்ட போட்டிகளில் விளையாட தகுதிபெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் ஆசீர்வாதம் மனோகரன், தலைமையாசிரியர் தனபாலன் சத்தியசிகாமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், ரவிக்குமார் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us