Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பட்டணம்காத்தான் ஊராட்சியில் மகளிர் மன்ற கட்டடம் : ஊராட்சி வேட்பாளர் சித்ராமருது திட்டவட்டம்

பட்டணம்காத்தான் ஊராட்சியில் மகளிர் மன்ற கட்டடம் : ஊராட்சி வேட்பாளர் சித்ராமருது திட்டவட்டம்

பட்டணம்காத்தான் ஊராட்சியில் மகளிர் மன்ற கட்டடம் : ஊராட்சி வேட்பாளர் சித்ராமருது திட்டவட்டம்

பட்டணம்காத்தான் ஊராட்சியில் மகளிர் மன்ற கட்டடம் : ஊராட்சி வேட்பாளர் சித்ராமருது திட்டவட்டம்

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

ராமநாதபுரம் : 'பட்டணம்காத்தான் ஊராட்சியில் மகளிர் மன்ற கட்டடம், கட்டித்தரப்படும்' என தலைவர் வேட்பாளர் சித்ராமருது கூறினார்.

ராமநாதபுரம் அரசு குடியிருப்பு பகுதியில், பூட்டுசாவி சின்னத்துக்கு, ஓட்டு கேட்டு பேசியதாவது: நான் வெற்றி பெற்றால், நேர்மையான நிர்வாகம் நடத்துவேன். அடிப்படை வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தீர்வு காண்பேன். ரோடு வசதி இல்லாத பகுதிகளில் ரோடு அமைப்பேன். மாதந்தோறும் வார்டு, வாரியாக மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்றுவேன். பாரதிநகர், ஓம்சக்தி நகர் ரேஷன் கடைகளில் வழங்கும் 10 லிட்டர் மண்ணெண்ணைய் போல அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டணம்காத்தான், சாத்தான்குளம், கற்பூரவலசை, அம்பேத்கர் நகர், சங்கந்தியான்வலசை, தென்னம்பிள்ளை வலசை ஆகிய பகுதிகளில் சமுதாய கூடம், மகளிர் மன்ற கட்டடம் உறுதி. அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறுவர் விளையாட்டு பூங்கா அமைப்பேன். அரசின் இலவச நலத்திட்டங்கள், விரைந்து கிடைக்க செய்வேன், என்றார். ஆடிட்டர் லோகநாதன், காங்., மாவட்ட செயலாளர் ரவி, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். இளைஞரணி நகர செயலாளர் மணிகண்டன் உடன் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us