/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஆளில்லா ரயில்வே கேட்களுக்கு உடனே ஊழியர் நியமிக்க கோரிக்கைஆளில்லா ரயில்வே கேட்களுக்கு உடனே ஊழியர் நியமிக்க கோரிக்கை
ஆளில்லா ரயில்வே கேட்களுக்கு உடனே ஊழியர் நியமிக்க கோரிக்கை
ஆளில்லா ரயில்வே கேட்களுக்கு உடனே ஊழியர் நியமிக்க கோரிக்கை
ஆளில்லா ரயில்வே கேட்களுக்கு உடனே ஊழியர் நியமிக்க கோரிக்கை
ADDED : செப் 28, 2011 11:52 PM
கும்பகோணம்: 'ஆளில்லா ரயில்வே கேட்களுக்கு உடனடியாக தற்காலிக ஊழியர்களை நியமித்து ரயில் விபத்தினை தடுத்து உயிர்சேதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்' என அனைத்து ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் அன்பழகன் தலைமையில் கும்பகோணத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட கோரி ரயில்வே துறை இணை அமைச்சர் முனியப்பாவுக்கு அகில இந்திய தலைவர் அன்பழகன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மன்னார்குடியில் இருந்து 40ஆண்டுக்குப் பிறகு சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட உள்ள மன்னை எக்ஸ்பிரஸ் புதிய ரயில் வண்டியின் மூலம் தஞ்சை டெல்டா மாவட்ட மக்கள் மிகுந்த பயனடைவார்கள். இந்த புதிய ரயிலை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த புதிய ரயிலை இயக்குவதற்கு பெருமுயற்சி எடுத்த ரயில்வே நிலக்குழுத்தலைவருக்கு எங்களது சங்கம் மனதார பாராட்டு தெரிவிக்கிறது. தொடர்ந்து அவரது முயற்சியில் கும்பகோணம்- விருத்தாச் சலம் புதிய ரயில்பாதை விரைவில் அமைந்திட வேண்டு கிறோம். தென்னக ரயில்வேயில் ஆளில்லா கேட்க ளுக்கு உடனடி யாக தற்காலிக ஊழியர்களை நியமித்து ரயில் விபத்தை தடுத்து உயிர்ச்சேதம் ஏற்படாமல் பாதுகாக்க வலியுறுத்துகிறது. தென்னக ரயில்வேயில் முன்பதிவு மற்றும் டிக்கெட் விற்பனை ஆகிய பிரிவுகளில் போதிய ஊழியர்கள் இல்லா மையால் ரயில் உபயோகிப்பா ளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.
இதை போக்கிட உடனடியாக புதிய பணியாளர் நியமிக்க இச்சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


