/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசு பள்ளி முன் கால்வாய் சேதம் :மாணவர்கள் அவதிஅரசு பள்ளி முன் கால்வாய் சேதம் :மாணவர்கள் அவதி
அரசு பள்ளி முன் கால்வாய் சேதம் :மாணவர்கள் அவதி
அரசு பள்ளி முன் கால்வாய் சேதம் :மாணவர்கள் அவதி
அரசு பள்ளி முன் கால்வாய் சேதம் :மாணவர்கள் அவதி
ஊத்துக்கோட்டை:அரசு மேனிலைப் பள்ளி முன், கழிவுநீர் கால்வாய் சேதமடைந்ததால் பள்ளியின் உள்ளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு வழியில் மட்டும் செல்ல வேண்டியுள்ளது.ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி 1948ம் ஆண்டு துவக்கப்பட்டது.
பள்ளியின் உள்ளே செல்ல இரண்டு வழிகள் உள்ளன. மூன்று மாதத்திற்கு முன், இரண்டு வழிகளில் ஒரு வழியின் முன்னே அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதமடைந்ததால், ஒரு வழியில் மட்டும் செல்ல வேண்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு வழியில் செல்வதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதில் பள்ளி முடிந்த பின் மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளியே வருவதால், கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும்போது காயமடைகின்றனர்.
இதுகுறித்து பள்ளியில் உள்ள ஆசிரியர்களை கேட்டதற்கு, ''மூன்று மாதங்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் மேல் லாரி ஏறியதில் கால்வாய் சேதமடைந்தது. நாங்களே ஆட்களை வைத்து சீரமைத்தோம். ஆனால், அடுத்த சில தினங்களில் மீண்டும் வாகனங்கள் அதன் மேல் ஏறி பெருமளவு சேதடைந்தது.இதுகுறித்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளோம். அவர்கள் விரைவில் கால்வாய் அமைத்துத் தருவதாக கூறியுள்ளனர். மேலும், பள்ளியின் முன்னே வாகனங்கள் நிறுத்துவதால் மாணவர்கள் பள்ளிக்கு வர சிரமப்படுகின்றனர்,'' என்றனர்.
எம்.யுவராஜ்


