ADDED : அக் 07, 2011 04:42 AM
புதுடில்லி: வியட்நாம் அதிபர் டூரோங்டான் ஷாங் வரும் 12-ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவரது சுற்றுப்பயணத்தி்ன்போது பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார். பேச்சுவார்த்தை யில் இருநாடுகளிடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவத்தில் இணைந்து ஒத்துழைப்பது குறித்து இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் பாலித்தீவில் நடைபெற உள்ள 18-வது கிழக்காசியநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள மாநாடு குறித்தும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என கூறப்படுகிறது.தொடர்ந்து வியட்நாமிற்கு ராணுவ ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் பிரமோஷ், சூப்பர் சோனிக் போன்ற ஏவுகணைகளை பரிமாற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கபட உள்ளனர். மேலும் சீனா அதனுடைய தென்பகுதியில் கடல் வளத்தை உரிமைகொண்டாடி வரும் வேளையில் இந்தியா-வியட்நாம் நட்புறவை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.


