/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"பேண்ட்' இசைக்கும் போட்டியில் மாணவியர் அசத்தல்"பேண்ட்' இசைக்கும் போட்டியில் மாணவியர் அசத்தல்
"பேண்ட்' இசைக்கும் போட்டியில் மாணவியர் அசத்தல்
"பேண்ட்' இசைக்கும் போட்டியில் மாணவியர் அசத்தல்
"பேண்ட்' இசைக்கும் போட்டியில் மாணவியர் அசத்தல்
ADDED : ஆக 22, 2011 12:03 AM
கோவை : கோவை, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த 'பேண்ட்'
இசைக்கும் போட்டியில், 1122 மாணவர்கள் பங்கேற்று தங்கள் இசைத்திறனை
வெளிப்படுத்தினர்.
கோயமுத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் கோவை மாவட்ட
விளையாட்டு நலச்சங்கம் சார்பில், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று
'பேண்ட்' வாத்திய இசைப்போட்டி நடந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை
சேர்ந்த, 22 பள்ளிகளின் 1122 மாணவர்கள் பங்கேற்றனர். ரோட்டரி கிளப் தலைவர்
குமரன், போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவர் போட்டி, மாணவியர் போட்டி,
மாணவர் மற்றும் மாணவியர் போட்டி, கிராமப்புற மாணவர்கள் போட்டி,
குழந்தைகளிடையே என, ஐந்து நிலையில் போட்டிகள் நடந்தன. பொது டியூன், வேகநடை,
மெதுநடை, வி.ஐ.பி., சல்யூட், டிஸ்பிளே, பாடல் வாசித்தல் என,
போட்டியாளர்கள் அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மேயர்
வெங்கடாசலம் பரிசு வழங்கினார். வெற்றியாளர்களுக்கு 7,500 ரூபாய் ரொக்கபரிசு
மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது. குழந்தைகள்
பிரிவில் முதல் பரிசை சென்ட் லியோஸ் பள்ளி, இரண்டாவது பரிசை
நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயா அணியினர் கைப்பற்றினர். மாணவர் பிரிவில்
பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.கே., பள்ளி முதலிடம், கணபதி சி.எம்.எஸ்.,
பள்ளி இரண்டாவது இடம்; மாணவியர் பிரிவில் அவிலா கான்வென்ட் பள்ளி முதலிடம்,
திருச்சி ரோடு செயின்ட் ஜோசப் பள்ளி அணியினர் இரண்டாமிடத்தை வென்றனர்.
மாணவ மாணவியர் பிரிவில் ஒண்டிப்புதூர் செயின்ட் ஜோசப் பள்ளி முதலிடம்,
காளப்பட்டி சுகுணா வித்யாலயா மற்றும் கோவைப்புதூர் ஆசிரம் மெட்ரிக் பள்ளி,
எட்டிமடை அமிர்தா வித்யாலயா அணியினர் இரண்டாம் இடம் பகிர்ந்து கொண்டனர்.
போட்டியில் 121 மாணவர்களை பங்கேற்க செய்து, அதிகளவிலான வாசிப்பு கருவிகளை
பயன்படுத்திய மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளிக்கு
சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கிக்கானி பள்ளி மாணவி மைத்ரிகலாவிற்கு சிறந்த
குழந்தை போட்டியாளர் விருது கிடைத்தது. கோயமுத் தூர் ரோட்டரி சங்க
நிர்வாகி நாராயணன், கோவை மாவட்ட விளையாட்டு நலச்சங்க தலைவர் ராமச்சந்திரன்,
துணைத் தலைவர் நரேந்திரன், செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.


