ADDED : செப் 12, 2011 04:04 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சியில் தேர்தல் குறித்த அனைத்து கட்சிகளின்
ஆய்வுக்கூட்டம் (தேர்தல் அலுவலர்) செயல் அலுவலர் துரைசாமி தலைமையில்
நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலை
வகித்தார்.உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட
அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
தேர்தலில் அரசியல்
கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும், கடைபிடிக்க
வேண்டிய விதிமுறைகள் விளக்கப்பட்டது.


