டிரினிடி அகாடமியில் 23ம் ஆண்டு விழா
டிரினிடி அகாடமியில் 23ம் ஆண்டு விழா
டிரினிடி அகாடமியில் 23ம் ஆண்டு விழா
ADDED : செப் 06, 2011 01:57 AM
நாமக்கல்: நாமக்கல் டிரினிடி அகாடமி பள்ளியில், 23ம் ஆண்டு விளையாட்டு விழா
நடந்தது.
டக்டர் செல்வக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் சோமசுந்தரம்
ஆண்டறிக்கை வாசித்தார். இன்னர்வீல் சங்க தலைவி உமாராணி பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயம்
வழங்கப்பட்டது. விழாவில் சிலம்பம், யோகா, கராத்தே, நாட்டியாஞ்சலி போன்ற
நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் தலைவர் டாக்டர் குழந்தைவேல், வளாக
ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், செயலாளர் தயாளன், பள்ளிக் குழு
உறுப்பினர்கள் சந்திரன், நரசிம்மாச்சாரி உட்பட பல பங்கேற்றனர்.


