Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

பஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

பஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

பஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

ADDED : அக் 12, 2011 01:09 AM


Google News
கடலூர் : தனியார் பஸ் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் போனஸ் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்குவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடலூரில் நடந்தது. தொழிலாளர் அலுவலர் சந்திசேகர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலவன், கருணாகரன், கோபாலகிருஷ்ணன், தேசிங்குராஜனும், தொழிற்சங்கம் சார்பில் சேகர், குருராமலிங்கம், பண்டரிநாதன், சாமிநாதன் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், சம்பள உயர்வாக டிரைவர்களுக்கு (13 நாள் பணிக்கு) 6,450 ரூபாயும், கண்டக்டர்களுக்கு 6,300 ரூபாயும், தீபாவளி போனசாக டிரைவர்களுக்கு 6,401 ரூபாய், கருணைத் தொகை 1,699 ரூபாய் என மொத்தம் 8,100 ரூபாயும், கண்டக்டர்களுக்கு போனஸ் 6,253 ரூபாய், கருணை தொகை 1,747 ரூபாய் என மொத்தம் 8,000 ரூபாய் வழங்க நிர்வாக தரப்பினரும், தொழிற் சங்கத்தினரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பள உயர்வு மற்றும் போனசை வரும் 17ம் தேதிக்கு முன் கொடுப்பதாக நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொண்டனர். இந்த உடன்பாட்டின் மூலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் தொழிலாளர்கள் 1,500 பேர் பயனடைவார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us