/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சென்னையில் மாநில வூசு போட்டி நெல்லை மாவட்ட மாணவர்கள் வெற்றிசென்னையில் மாநில வூசு போட்டி நெல்லை மாவட்ட மாணவர்கள் வெற்றி
சென்னையில் மாநில வூசு போட்டி நெல்லை மாவட்ட மாணவர்கள் வெற்றி
சென்னையில் மாநில வூசு போட்டி நெல்லை மாவட்ட மாணவர்கள் வெற்றி
சென்னையில் மாநில வூசு போட்டி நெல்லை மாவட்ட மாணவர்கள் வெற்றி
ADDED : அக் 01, 2011 11:26 PM
தென்காசி : சென்னையில் நடந்த மாநில வூசு போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 9வது சப்-ஜூனியர் மாநில அளவிலான வூசு சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் நெல்லை மாவட்டம் மடத்தூரை சேர்ந்த மாணவி ஹேமலதா, சுரண்டை மாணவர் பார்த்தீபன் வெள்ளி பதக்கம் பெற்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு வூசு மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு வூசு செயலாளர் கணேசன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
மேலும் இம்மாணவ, மாணவிக்கு பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் லீமாரோஸ், நெல்லை வூசு தலைவர் டேவிட் செல்லத்துரை, துணைத் தலைவர் ராமச்சந்திரன், சிவநாடானூர் பஞ்.,தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலர் கலைவாணி, மடத்தூர் வூசு செயலாளர் பாலரவிசந்திர முருகன் வாழ்த்து தெரிவித்தனர்.


