/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சட்டசபை தேர்தல் பணி ஊதியம் கிடைக்காததால் போலீசார் புலம்பல்சட்டசபை தேர்தல் பணி ஊதியம் கிடைக்காததால் போலீசார் புலம்பல்
சட்டசபை தேர்தல் பணி ஊதியம் கிடைக்காததால் போலீசார் புலம்பல்
சட்டசபை தேர்தல் பணி ஊதியம் கிடைக்காததால் போலீசார் புலம்பல்
சட்டசபை தேர்தல் பணி ஊதியம் கிடைக்காததால் போலீசார் புலம்பல்
ADDED : அக் 08, 2011 11:00 PM
சிவகங்கை : சட்டசபை தேர்தலில் வேட்பாளரை கண்காணித்த 'ஸ்டேட்டிக் டீம்' போலீசாருக்கு உழைப்பூதியம் கிடைக்கும் முன்னே, உள்ளாட்சி தேர்தல் பணியா என போலீசார் புலம்புகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், இனாம் கொடுப்பதை தடுக்க, வேட்பாளர்களுடன் செல்ல ஒவ்வொரு தொகுதிக்கும் 'ஸ்டேட்டிக் டீம்' நியமித்து தேர்தல் கமிஷனர் பிரவீன்குமார் உத்தரவிட்டார். அதன்படி, தொகுதிக்கு ஒரு வருவாய் அதிகாரி, எஸ்.ஐ.,, கேமரா மேன், இரண்டு போலீசார் வீதம் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கிய வாகனத்தில் வேட்பாளர்களுடன் சுற்றி வந்தனர். வேட்பாளர் பணம், இனாம் கொடுத்தால் உடனே வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இப்பிரிவில் பணியாற்றிய வருவாய்துறை ஊழியர்களுக்கு உழைப்பூதிய தொகையை தேர்தல் கமிஷன் வழங்கிவிட்டது. ஆனால், தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த குழுவில் பணியாற்றிய எஸ்.ஐ., மற்றும் போலீசாருக்கென உழைப்பூதியம் வழங்கப்படவில்லை.
புலம்பல்: தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் உழைப்பூதியம் கிடைக்கவில்லை. அதற்குள் உள்ளாட்சி தேர்தல் பணியும் வந்துவிட்டது. இதனால்,ஒவ்வொரு போலீசாருக்கும் சட்டசபை தேர்தல் பணியின்போது வரவேண்டிய 5,000 ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.


