/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/வாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் ஒத்திகை நிகழ்ச்சிவாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் ஒத்திகை நிகழ்ச்சி
வாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் ஒத்திகை நிகழ்ச்சி
வாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் ஒத்திகை நிகழ்ச்சி
வாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : அக் 09, 2011 12:05 AM
தஞ்சாவூர்: வாக்கு பதிவு துவங்குவதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் ஒத்திகை வாக்கு பதிவு செய்து காட்ட வேண்டும்.
என வாக்கு சாவடி தலைமை தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான பாஸ்கரன் அறிவுரை வழங்கினார்.உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி பதவிகளுக்கான தேர்தலில் மின்னணு இயந்திரங்களை கையாளுவது மற்றும் வாக்கு பதிவு அலுவலர்கள் செய்ய வேண்டிய கடைமைகள் குறித்த பயிற்சி முகாம் தஞ்சாவூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டரும் பாஸ்கரன் பார்வையிட்டு பேசியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடிக்கிறது. நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பதவிகளுக்கான தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்கு பதிவு நடக்கிறது. நகராட்சி பதவிகளுக்கான தேர்தலில் இரண்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் ஒன்றில் நகராட்சி தலைவருக்கும், மற்றொன்றில் வார்டு கவுன்சிலருக்கும் வாக்கு அளிக்க வேண்டும்.இதே போன்று டவுன் பஞ்சயத்து பதவிகளுக்கான தேர்தலில் இரண்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் ஒன்றில்டவுன் பஞ்சாயத்து தலைவருக்கும், மற்றொன்றில் டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் வாக்கு அளிக்க வேண்டும். வாக்கு பதிவு தலைமை அலுவலரின் கீழ் நான்கு வாக்கு பதிவு அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அனைத்து பொறுப்புகளையும் தலைமையேற்று செயல்படுத்த வேண்டும். வாக்கு பதிவு இயந்திரத்தில் முன்னதாகவே வாக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்பது குறித்தும், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் இயங்கும் நிலையில் உள்ளது என்பது குறித்தும் வாக்கு சாவடி முகவர்கள் திருப்தியடையும் வகையில் செயல் விளக்கும் அறிக்க வேண்டும்.இதற்காக வாக்கு பதிவு துவங்குவதுக்கு ஒரு மணி நேரத்துக்கும் முன் ஒத்திகை வாக்கு பதிவு நடத்த வேண்டும். வாக்கு பதிவை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் துவங்கி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். தேர்தல் பணியில் உறுதியாகவும், நடுநிலையுடனும், பாரபட்ச மற்ற வகையிலும் செயலாற்ற வேண்டும்.இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கரன் தெரிவித்தார்.


