வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி
வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி
வங்கியில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சி
ADDED : ஜூலை 15, 2011 12:07 PM
கரூர்: வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து பணம் பெற முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தையடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (50). தனியார் நிறுவன செக்யூரிட்டி. இந்நிலையில், கரூர் பழைய பைபாஸ் ரோட்டிலுள்ள வங்கிக்கு சென்ற மனோகரன், அங்கு 21 மற்றும் 8 கிராம் அளவுள்ள நகைகளை அடமானம் வைக்க முயன்றுள்ளார். அதில் 8 கிராம் மட்டுமே தங்கம் என்றும் 21 கிராம் நகை போலி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கரூர் டவுன் போலீசில் வங்கி மேலாளர் சிற்றரசு புகார் செய்தார். இதையடுத்து மனோகரன் கைது செய்யப்பட்டார்.


