ADDED : அக் 07, 2011 01:28 AM
செஞ்சி : தர்மபுரி டவுன் காரியமங்கலம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று
அதிகாலை மேல்மருவத்தூர் கோவிலுக்கு டாடா சுமோ காரில் சென்று
கொண்டிருந்தனர்.
செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கூட்ரோடு அருகே வந்த போது
திடீரென ஓரமாக இருந்த மரத் தின் மீது கார் மோதியது. இதில் கார் டிரைவர்
கணேசன், மணிகண்டன், மாலா, பிரமீளா, பாஞ்சாலி, முனியம்மாள் உட்பட 10 பேர்
படுகாயமடைந்தனர். அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


