ADDED : ஜூலை 25, 2011 02:07 AM
சேலம் : சேலம், அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் நடேசன், 60.
மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், வீரபாண்டி ஆறுமுகம் மீது நிலம் அபகரிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நில அபகரிப்பு பிரிவு போலீசார், நடேசனிடம் நடத்திய விசாரணையில் அவர் சில தகவல்களை கூறியதாகவும், இதனால், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மனம் உடைந்த நடேசன், நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


