/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஜாதி, மதம், மொழிகளைச் சொல்லி ஓட்டு கேட்காதது காங்.,: அழகிரி எம்.பி., பேச்சுஜாதி, மதம், மொழிகளைச் சொல்லி ஓட்டு கேட்காதது காங்.,: அழகிரி எம்.பி., பேச்சு
ஜாதி, மதம், மொழிகளைச் சொல்லி ஓட்டு கேட்காதது காங்.,: அழகிரி எம்.பி., பேச்சு
ஜாதி, மதம், மொழிகளைச் சொல்லி ஓட்டு கேட்காதது காங்.,: அழகிரி எம்.பி., பேச்சு
ஜாதி, மதம், மொழிகளைச் சொல்லி ஓட்டு கேட்காதது காங்.,: அழகிரி எம்.பி., பேச்சு
ADDED : அக் 12, 2011 01:09 AM
கடலூர் : ''காங்., வெற்றி பெற்றால் கடலூர் நகரில் மறு மலர்ச்சியை கொண்டு
வருவோம்'' என அழகிரி எம்.பி., பேசினார்.
கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு
போட்டியிடும் காங்., வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து எம்.பி., அழகிரி
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது:ஜாதி, மதம்,
மொழிகளைச் சொல்லி ஓட்டு கேட்காமல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
அனைவரையும் ஒன்றாக கருதுவது காங்., இந்தியாவில் சிறந்த நகராட்சியாக கடலூரை
உருவாக்குவோம். 10 ஆண்டுகளாக கடலூர் நகரில் உள்ள இழிநிலையை போக்கி நல்ல
சாலை கொண்டு வருவதோடு சுத்தமான குடிநீர் வழங்குவோம். கடலூர் எம்.பி.,யாக
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் மாவட்டத்திற்கு மூன்று பெரிய
திட்டங்களான ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்தது. 100 கோடி ரூபாய்
கல்வி கடன். 6 ஆறுகளின் வெள்ளத் தடுப்பு பணிக்கு மத்திய அரசின் நீர்
வளத்துறையிடமிருந்து 300 கோடி ரூபாய் பெற்றுத் தரமுடிந்தது. கடலூர் நகரமன்ற
தலைவர் பதவிக்கு போட்டியிடும் சந்திரசேகரை வெற்றி பெற்றச் செய்தால்
நகரில் மறுமலர்ச்சியை கொண்டு வருவோம். இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.
வேட்பாளர் சந்திரசேகரன், நகர தலைவர் ரகுபதி, ராகுல்காந்தி இளையோர் பேரவை
சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


