Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மக்களுக்காக உழைப்பேன் :அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு

மக்களுக்காக உழைப்பேன் :அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு

மக்களுக்காக உழைப்பேன் :அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு

மக்களுக்காக உழைப்பேன் :அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு

ADDED : அக் 07, 2011 12:01 AM


Google News
திண்டுக்கல் : ''மக்களுக்காக எந்தநேரமும் உழைப்பேன்.

குறை சொல்ல முடியாத வார்டாக மாற்றுவேன்,'' என, திண்டுக்கல் நகராட்சி 7 வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் ரா.சக்திவேல் கூறினார்.திண்டுக்கல் ஆர்.எம். காலனி, பள்ளிவாசல்தெருவில் அவர் பேசியது: வேட்பாளராக அறிவித்து, மக்கள் பணியாற்ற உத்தரவிட்டு இருக்கும் முதல்வருக்கும், அமைச்சர் விஸ்வநாதனுக்கும், நகராட்சி தலைவர் வேட்பாளர் மருதராஜுக் கும் நன்றி. 7 வது வார்டின் குறைகளை நிவர்த்தி செய்து, குறையே சொல்லாத வார்டாக மாற்றுவேன். ஆர்.எம்.காலனி, அஞ்சுகம் தெரு, பள்ளிவாசல் தெரு, காமராஜர் தெரு, நேருஜிரோடு, கொட்டகைக்காரர் தெரு, முருகன் கோவில் தெரு, மஞ்சுக்காரத்தெரு, சோலை இல்லம், குமரப்பா நிலையம், சமயபுரம்மாரியம்மன் கோவில் தெரு, சக்திவேல் கல்யாண மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுகாதாரப்பணிகள் சிறப்பாக நடக்கும். சுத்தமான குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதற்கும், தெருவிளக்குள் எரியவும், பாதாள சாக்கடையால் பாதிக்கப்பட்ட ரோடுகளை மீண்டும் மறு சீரமைப்பு செய்து புதிதாக அமைப்பதற்கும் ஏற்பாடு செய்வேன். தார்ரோடு இல்லாத பகுதிகளில் ரோடு போடுவதற்கும், பொது நூலகம் அமைப்பதற்கும் முயற்சி எடுப்பேன். சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கு திடலும், பூங்காவும் அமைக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும். அரசின் இலவச திட்டங்களான கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம் ஆகியவை உங்கள் வீடு தேடி வரவும் பாடுபடுவேன். குப்பை இல்லாத வார்டாக மாற்ற தெருக்கள் தோறும் தொட்டியும், குப்பை வண்டி தொடர் ந்து வருவதற்கும் ஏற்பாடு செய்வேன். பகிர்மான குழாய்களை சரி செய்து வாரத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடை க்க ஏற்பாடு செய்வேன். பிறப்பு, இறப்பு, கட்டட வரைப்பட சான்றிதழ்கள் உங்கள் வீடு தேடி வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மழைநீர் வடிகால் வசதிகள் செய்து தரப்படும். மக்கள் எந்தநேரமும் என்னை தொடர்பு கொண்டு, பிரச்னைகளை தெரிவிக்கலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us