ADDED : அக் 07, 2011 11:09 PM
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே வீட்டு கூரையை மாற்றும் பணியில்
ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.கடலூர் மாவட்டம்,
விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம்,
45.
இவரது கூரை வீட்டில் இருந்த விழல்களை அகற்றி, புதிய விழல் போடும் பணி
நடந்தது. இப்பணியில் ராஜலிங்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி, 40 மற்றும்
மாணிக்கவேல், 45 ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மின் கம்பத்தில் இருந்து
வீட்டிற்கு மின்சாரம் வந்த மின் ஓயரை மூன்று பேரும் தூக்கிப் பிடித்தனர்.
அப்போது மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.இதில் ராஜலிங்கம், மாணிக்கவேல்
ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த ராஜேஸ்வரி விருத்தாசலம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.விருத்தாசலம் போலீசார்
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


