/உள்ளூர் செய்திகள்/தேனி/மந்தநிலையில் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவுமந்தநிலையில் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு
மந்தநிலையில் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு
மந்தநிலையில் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு
மந்தநிலையில் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு
ADDED : அக் 01, 2011 09:53 PM
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் பிரிவு மந்த நிலையில் செயல்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பிரிவு தேனி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவிற்கென அதிகாரிகள் உள்ளனர். மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள மொத்த வேட்பாளர்களின் பட்டியலை கட்சி ரீதியாக தயாரிக்க முடியாதநிலையில் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து அனைத்து விபரங்களும் பெறப்பட்டும் விபரத்தை சேகரிப்பதில் திணறி வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இருந்தும் உரிய நேரத்தில் தகவல் தருவதில் தாமதம் ஏற்படுகிறது. தேர்தல் சுறுசுறுப்பிற்கு இப்பிரிவை கொண்டுவர கலெக்டர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


