மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு
மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு
மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு
ADDED : அக் 03, 2011 12:19 AM
சிவகங்கை:அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய நோயாளிகளின் ஆலோசகர் பணியிடங்களை கலைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.
இங்கு வரும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க, மாநில அளவில் 565 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் மாதந்தோறும் 5,000 ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது, இப்பணியிடங்களை கலைத்து விடுமாறு, அந்தந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்களுக்கு, அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, மருத்துவமனைகளில் பணியாற்றிய 565 ஆலோசகர் பணியிடங்கள் செப்., 30ம் தேதியோடு கலைக்கப்பட்டன.


