/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உள்ளாட்சி பதவிகளுக்கு விருப்ப மனுவிழுப்புரத்தில் குவிந்த அ.தி.மு.க.,வினர்உள்ளாட்சி பதவிகளுக்கு விருப்ப மனுவிழுப்புரத்தில் குவிந்த அ.தி.மு.க.,வினர்
உள்ளாட்சி பதவிகளுக்கு விருப்ப மனுவிழுப்புரத்தில் குவிந்த அ.தி.மு.க.,வினர்
உள்ளாட்சி பதவிகளுக்கு விருப்ப மனுவிழுப்புரத்தில் குவிந்த அ.தி.மு.க.,வினர்
உள்ளாட்சி பதவிகளுக்கு விருப்ப மனுவிழுப்புரத்தில் குவிந்த அ.தி.மு.க.,வினர்
ADDED : செப் 07, 2011 10:17 PM
விழுப்புரம்:உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட அ.தி. மு.க., வினர் 1000 பேர்
வரை விருப்ப மனு கொடுத்துள்ளனர்.உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட அ.தி.
மு.க., வினர் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 2ம் தேதி
துவங்கி விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் உள்ள கட்சி
அலுவலகத்தில் அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார். மாவட்ட தேர்தல்
பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான் கட்சியினரிடமிருந்து மனுக்களை
பெற்றார்.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்திலுள்ள விழுப் புரம், திண்டிவனம் நகராட்சிகள்
மற்றும் 11 ஒன்றியங்கள், 6 பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிட ஒன்றிய, நகர
நிர்வாகிகள் சிலர் விருப்ப மனுக் களை தாக்கல் செய்து வந்தனர்.
இதனைத்
தொடர்ந்து எதற்கும் நாள் நட்சத்திரம் பார்க்கும் அ.தி.மு.க., வினர், புதன்
கிழமையான நேற்று ஒரே நேரத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய ஆயிரக்கணக்கானோர்
குவிந்திருந்தனர்.இதனால் நேற்று கட்சி அலுவலகத்தில் சிறப்பு கவுன்டர்கள்
மூலம் மனுக்களை பெற்றனர். மனுவில் பெயர், விலாசம், பதவி, போட்டியிடுவதற்கான
இடம் மற்றும் காரணங்கள் உள்ளிட்ட 22 வகையான கேள்விகளுக்கு பதில் அளித்து
புகைப்படத்துடன் விருப்ப மனுக்களை அளித்தனர். அதிகளவில் பெண் தொண் டர்களும்
உறவினர்களுடன் வந்திருந்தனர். நேற்று வரை 1000 பேர் வரை விருப்ப மனுக்களை
தாக்கல் செய்திருந்தனர்.


