Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காரில் கடத்திவரப்பட்ட1,344 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரில் கடத்திவரப்பட்ட1,344 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரில் கடத்திவரப்பட்ட1,344 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரில் கடத்திவரப்பட்ட1,344 மதுபாட்டில்கள் பறிமுதல்

ADDED : அக் 08, 2011 01:18 AM


Google News
மதுராந்தகம்:புதுச்சேரியிலிருந்து, காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி., ஸ்ரீதேவி தலைமையில், படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, கொளம்பாக்கம் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக, வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது.போலீசார், பழமத்துரைச் சேர்ந்த கார் டிரைவர் குமாரிடம், 22, விசாரணைநடத்திய போது, புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை, படாளத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார், 1,344 மது பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us