/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/6 டன் மத்தி கருவாடுகள் ஆந்திரா அனுப்பப்பட்டது6 டன் மத்தி கருவாடுகள் ஆந்திரா அனுப்பப்பட்டது
6 டன் மத்தி கருவாடுகள் ஆந்திரா அனுப்பப்பட்டது
6 டன் மத்தி கருவாடுகள் ஆந்திரா அனுப்பப்பட்டது
6 டன் மத்தி கருவாடுகள் ஆந்திரா அனுப்பப்பட்டது
ADDED : செப் 29, 2011 01:45 AM
புதுச்சேரி : பொம்மையார்பாளையம் மீனவப் பகுதியில் இருந்து 6 டன் மத்தி கருவாடுகள் கோழித்தீவனத்திற்காக ஆந்திரா அனுப்பட்டது.புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான பொம்மையார்பாளைம், சின்ன முதலியார்சாவடி உள்ளிட்டப்பகுதிகளில் உள்ள மீனவர்களின் வலைகளில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கி வருகிறது.
இந்த மீன்களை மீனவர்கள் வெயிலில் காய வைத்து கருவாடாக மாற்றி வருகின்றனர். கருவாடாக மாறிய பிறகு கோழித்தீவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர். நேற்று பொம்மையார்பாளையம் கடற்கரையில் 6 டன் கொண்ட மத்தி கருவாடுகளை மீனவர்கள் கோழித் தீவனத்திற்காக ஆந்திரா பகுதிக்கு லாரி மூலம் அனுப்பி வைத்தனர்.இது குறித்து மீனவர் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட தூரத்தில் மத்தி மீன்கள் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த மீன்களை அதிக அளவில் கோழித்தீவனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வாங்கி செல்கின்றனர். நேற்று 6 டன் கொண்ட மத்தி கருவாடுகளை ஆந்திரா பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். கடந்த வாரம் 5க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு மத்தி கருவாடுகள் அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.


