கருத்தில் மாற்றமில்லை: பிரசாந்த் பூஷன்
கருத்தில் மாற்றமில்லை: பிரசாந்த் பூஷன்
கருத்தில் மாற்றமில்லை: பிரசாந்த் பூஷன்
ADDED : செப் 03, 2011 10:52 AM
புதுடில்லி: எம்.பி.,க்கள் பற்றி தான் கூறிய கருத்தில் எவ்வித மாற்றமுமில்லை என்று அன்னா ஆதரவாளரான பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, எம்.பி.,க்கள் குறித்து அவரது ஆதரவாளரான பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்தார். இதற்காக தற்போது பிரசாந்த் பூஷன் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த பூஷன், தனது கருத்தில் எவ்வித மாற்றமுமில்லை எனவும், நோட்டீசை சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார்.


