/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மன்னார்குடி கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்மன்னார்குடி கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்
மன்னார்குடி கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்
மன்னார்குடி கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்
மன்னார்குடி கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்
ADDED : ஜூலை 26, 2011 12:34 AM
மன்னார்குடி: தமிழக வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ஆடிப்பூரத்தேர் திருவிழாவை முன்னிட்டு, 'துவஜாரோகணம்' என்ற கொடியேற்ற விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது.
வைணவ ஸ்தலங்களில் 12 மாதமும் திருவிழாவை காணும் சிறப்பை பெற்ற ஸ்தலம் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில். வைணவ ஸ்தலங்களில் பெருமாளுக்கு மட்டும் விழா எடுத்து தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் மற்றும் மன்னார்குடி படித்தாண்டா பத்தினி செங்கமலத்தாயாருக்கு மட்டும் ஆடிப்பூரத்தன்று தனித்தேரில் எழுந்தருளி பக்தருக்கு அருள்பாலிப்பது சிறப்புக்குரியது. ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று நடக்கும் ஆடிப்பூரத் தேர்விழாவை முன்னிட்டு, நேற்று மன்னார்குடி கோவிலில் கொடியேற்றும் வைபவம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.