/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கடலூரில் 23ம் தேதி சிறப்பு முகாம்பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கடலூரில் 23ம் தேதி சிறப்பு முகாம்
பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கடலூரில் 23ம் தேதி சிறப்பு முகாம்
பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கடலூரில் 23ம் தேதி சிறப்பு முகாம்
பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கடலூரில் 23ம் தேதி சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 19, 2011 12:44 AM
கடலூர் : கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் 'செயின் கோபெயின்' நிறுவனம் உற்பத்தி தொழில் நுட்பம் என்ற ஐந்தாண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளது. இதில் சேர 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் போது மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் இதே நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 23ம் தேதி காலை கடலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.