/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விக்கிரவாண்டி கோவிலில் மரக் கன்றுகள் நடும் விழாவிக்கிரவாண்டி கோவிலில் மரக் கன்றுகள் நடும் விழா
விக்கிரவாண்டி கோவிலில் மரக் கன்றுகள் நடும் விழா
விக்கிரவாண்டி கோவிலில் மரக் கன்றுகள் நடும் விழா
விக்கிரவாண்டி கோவிலில் மரக் கன்றுகள் நடும் விழா
ADDED : செப் 04, 2011 11:21 PM
விழுப்புரம் : விக்கிரவாண்டி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் லியோ கிளப் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாவட்ட லியோ கவுன்சில் மற்றும் விக்கிரவாண்டி லியோ கிளப் இணைந்து நடத்திய விழாவிற்கு மாவட்ட கவுன்சில் தலைவர் திலீப் குமார் தலைமை தாங்கினார். லியோ கிளப் தலைவர் விஜயநாத் முன்னிலை வகித்தார். லியோ கவுன்சில் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். அரிமா மாவட்ட ஆளுனர் கல்யாண்குமார் ஆஞ்சநேயர் கோவில் குளக்கரையை சுற்றி மரக்கன்றுகளை நட்டார். மாவட்ட முதல் பெண்மணி மாலினி, மாவட்ட தலைவர்கள் முரளிதரன், கீதாஞ்சலி சீனுவாசன், லியோ கவுன்சில் உறுப்பினர்கள் சம்சுதீன், ஆறுமுகம், கணேசன், பாலாஜி, குப்தா, லியோ நிர்வாகிகள் பாலு, ராஜா, முருகன், செந்தில், பிரபா கலந்து கொண்டனர். இதேபோல் பொம்பூர் ஆதிதிராவிட நலப்பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகள் நட்டனர்.


