/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் வ.உ.சி.பிறந்த நாள் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவிப்புநெல்லையில் வ.உ.சி.பிறந்த நாள் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவிப்பு
நெல்லையில் வ.உ.சி.பிறந்த நாள் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவிப்பு
நெல்லையில் வ.உ.சி.பிறந்த நாள் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவிப்பு
நெல்லையில் வ.உ.சி.பிறந்த நாள் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவிப்பு
ADDED : செப் 06, 2011 01:08 AM
திருநெல்வேலி : வ.உ.சி., 140வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வ.உ.சி.சிலைக்கு கலெக்டர் மற்றும் சர்வ கட்சியினர் மாலை அணிவித்தனர்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லையில் உள்ள வ.உ.சி.மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் செல்வராஜ், ஆர்.டி.ஓ., ராஜகிருபாகரன் மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.பி.ஆதித்தன், அதிமுக விவசாய அணிச் செயலாளர் தச்சை கணேஷ் ராஜா, ஜெ., பேரவை இணைச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவித்தனர். இளமதி, பகுதிச் செயலாளர்கள் மோகன், மாதவன், காமராஜ், முன்னாள் சேர்மன் வெங்கடசுப்பிரமணியன், பேச்சாளர் காந்திமதிநாதன், ஏ.எஸ்.சங்கர், பாரத், சாத்தை நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பா.ஜ., சார்பில் மாநில பார்வையாளர் எஸ்.வி.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மண்டல தலைவர் அருள்ராஜ், அமைப்புச் செயலாளர் சுரேஷ், எஸ்.சி.அணிச் செயலாளர் முருகதாஸ், எஸ்.வி.குருசாமி, முத்துக்குமார், சிவசக்திலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் முருகன், மோகன், வேணுகோபால், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ராம்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ஐ.என்.டி.யு.சி., தலைவர் உமாபதிசிவன், பொதுச் செயலாளர் சுத்தமல்லி முருகேசன், ஏ.பி.சரவணன், சங்கரபாண்டியன், முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன், டி.பி.எஸ்.சுப்பிரமணியன், தச்சை முருகேசன், ஜெகநாதராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மதிமுகவினர் வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் கே.எம்.ஏ.நிஜாம், குட்டி என்ற சண்முக சிதம்பரம், தி.மு.ராஜேந்திரன், சுப்பையா, திவான் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாரணியர் இயக்கம் சார்பில் ஆசிரியர் கந்தகுமார் மற்றும் மதிதா பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்தனர். திருநெல்வேலி சைவ வேளாளர் சமுதாய நலச்சங்கம் சார்பில் வ.உ.சி.140வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சங்கரதிருநாவுக்கரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சுப்பையாபிள்ளை, புலியுருடையான், மருதநாயகம்பிள்ளை, காந்திமதிநாதன், சிவராமன், வேலாயுதம், சீனிவாசன், ஆனந்த், வ.உ.சி.பேரவை கணேசன், நெல்லையப்பன், ஆறுமுகம், திராவிடமணி, தாடி கிட்டு, சுப்பையா, இசக்கியாபிள்ளை, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


